யார் எழுதுவது குப்பை? – அவதூறு பரப்பும் அரைவேக்காட்டு ஜெயமோகனா, வலைப்பதிவர்களா?

பெரியார் பற்றிய உங்கள் பதிவுகள் அவரை ஆளுமையை கணிக்கத் தவறியவை என்பது என் கருத்து. என் எளிய அறிவில் தமிழ் சமுகத்தின் ஆகப்பெரும் ஆளுமைகளில் பெரியார் முதன்மையானவர். தலித்துகளின் தற்போதைய வளர்ச்சிக்கும், சுயமரியாதையான வாழ்வுக்கும் ஆன காரணகர்த்தக்களில் அவரும் ஒருவர். நானறிந்து தமிழ் எழுத்தாளர்களில் நுண்ணுணர்வு அதிகம் மிக்கவர் நீங்கள். உங்களின் பெரியார் பற்றிய பார்வைக் கோணமும் மாறும் என்றே நம்புகிறேன்.
தவிரவும் ஆனந்த விகடனின் விசமத்தனமான அவதூறை வன்மையாக கண்டிக்கிறேன்.

மிக்க ப்ரியமுடன்

சரவணன்

அன்புள்ள சரவணன் . உங்கள் கருத்தை அறிந்துகொண்டேன். நான் என் கருத்துகக்ளில் எப்போதுமே பிடிவாதம் உள்ளவனல்ல. எப்போதுமே விவாதத்துக்கு தயாராக இருப்பவன். என் எண்ணங்களில் என் நண்பர்களுடனான விவாதங்கள் ஏன் எதிரிகளுடனான விவாதங்கள் பெரும் மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன. குறிப்பாக சோதிப்பிரகாசம். குமரிமைந்தன். பொ.வேல்சாமி .அவர்கள் மார்க்ஸியர்கள், தமிழியக்க வாதிகள். குமரிமைந்தன் பெரியாரியருகூட

ஆகவே விவாதிப்போம்.

அன்புடன்

ஜெ

தந்தை பெரியார் குறித்த ஒரு வாசகரின் கடிதத்திற்கு ஜெயமோகனின் பதில் இது. ஜெயமோகனின் அரசியல் அறிவுக்கு இந்த வரிகள் ஒரு உதாரணம். குமரிமைந்தன் பெரியாரிஸ்ட் கிடையாது, அவர் ஒரு தமிழ்த்தேசியர். தமிழ்த்தேசியர்களில் பலவகை உண்டு. பெரியாரையும் பார்ப்பன எதிர்ப்பையும் ஏற்றுக்கொண்டு தமிழ்த்தேசியத்தை முன்வைப்பவர்கள், மார்க்சிய அடிப்படையில் தேசிய இன விடுதலையை முன்வைப்பவர்கள், பிற மொழிபேசும் சாதிகளை எதிரிகளாகச் சித்தரித்து தமிழ்த்தூய்மைவாதம் பேணுபவர்கள். இதில் குமரிமைந்தன் மூன்றாம்வகையைச் சேர்ந்தவர்.

லெமுரியாக் கண்டம் போன்ற தமிழ்த்தேசியப்பெருமிதங்களை முன்வைப்பவர், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் தமிழகச் சாதியினர், மலையாளிகள் ஆகியோரைத் தமிழர்களின் எதிரியாகச் சித்தரிப்பவர். இன்னும் சொல்லப்போனால் மார்க்சியத்தையும் மறுப்பவர். ‘தமிழக மக்கள் பொருளியல் உரிமைக்கழகம்’ என்பது அவர் நடத்தி வரும் அமைப்பு. தமிழ்த்தேசிய முதலாளிகள் உருவாக வேண்டுமானால் லைசென்ஸ் வழங்குவது, வருமான வரி ஆகியவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது அவரது கோரிக்கைகள். நான் சொல்வதில் நம்பிக்கையில்லாதவர்கள் குமரிமைந்தன் தன் வலைப்பக்கத்தில் பெரியார் குறித்து எழுதியுள்ள இந்த கட்டுரையைப் படியுங்கள். பெரியார் சாதி ஒழிப்பிற்காக சரியான புரிதலுடன் போராடவில்லை, அவர் சாதி வெறியர்களை அரவணைத்தார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு வீரர், ஆனால் பெரியார் ஆட்சியாளர்களின் பின்னால் ஒளிந்த கோழை, வர்ணாசிரமம் என்பதே தமிழரின் பண்பாடு – இவைதான் குமரிமைந்தனின் இந்த கட்டுரையின் அடிப்படை. இப்போது சொல்லுங்கள் குமரிமைந்தன் பெரியாரியரா? அப்படியானால் ஜெயமோகனை என்ன செய்யலாம்?

குமரிமைந்தனைப் பெரியாரியர் என்றும் அவர் மூலம் பெரியாரைப் புரிந்துகொண்டதாக ஜெயமோகன் சொல்கிறார் என்றால் அவருக்கு என்னவகையான புரிதல்கள் இருக்கக்கூடும்? பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும் சிந்தனைகளும் தமிழ்ப்பொதுவெளியில் மலைமலையாக குவிந்துகிடக்கின்றன. அதுவும் தமிழில். அதை வாசிக்காமல் குமரிமைந்தன் மாதிரியான தேசிய அடிப்படைவாதிகளின் கருத்துகளை வைத்துத்தான் ஜெயமோகன் இதுவரை பெரியார் பற்றி பேசிவந்தார் என்றால் ஜெயமோகன் நீங்கள் அறிவுநாணயமுள்ள ஆள்தானா? கூடுதல் நகைச்சுவை பொ.வேல்சாமியை தமிழியக்கவாதி என அடையாளப்படுத்துவது. இப்படியான அரைகுறைப்புரிதல் கொண்ட அரைவேக்காட்டு ஜெயமோகன்தான், ‘பெரியாருக்குத் தமிழ்ப்பண்பாடு குறித்த புரிதல் கிடையாது’ என்று எழுதியவர்.

ஜெயமோகனைப் பொறுத்தவரை அரைகுறையாகத் தான் புரிந்துகொண்ட விஷயங்களைப் பரபரப்பான ‘கருத்துக்களாக’ முன்வைத்து பாப்புலர் ஆவதுதான் நோக்கம். பெரியார், எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமலிங்கத்தேவர் என்று ஜெயமோகன் உதிர்த்த முத்துகள் இந்த வகையைச் சேர்ந்த விஷயம். இந்த ஜெயமோகன்தான் வலைப்பதிவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் இணையத்தில் எழுதப்படுபவற்றில் பெரும்பான்மையான எழுத்துகள் குப்பையானவை என்றும் அவதூறு கிளப்பி வருகிறார்.

ஒரு எழுத்தைக் குப்பை என்று விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. அதிலும் குப்பைகளையே உற்பத்தி செய்யும் ஜெயமோகனுக்குக் கூடுதல் உரிமை உண்டு. ஆனால் அந்த விமர்சனங்களையாவது நேர்மையாக, நடந்தது என்ன என்று தெரிந்துகொண்டு எழுதுகிறாரா ஜெயமோகன்? இணையங்களில் போலிப்பெயரால் விவாதம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் ஜெயமோகன். இதைச் சொல்ல அவருக்குக் கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா? அவர் மனைவியின் பெயரால் வந்த கட்டுரை ஒரு எழுத்துத்திருட்டு என்பதை ஆய்வாளர் பொ.வேல்சாமி அம்பலப்படுத்தியதை நண்பர் வளர்மதியின் இந்த பக்கத்திற்குப் போய்த் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் ஜெயமோகனின் அரைகுறைப் புரிதல்களுடன் கூடிய அவதூறுகள் :

இணையத்தில் பிறரை கீழ்த்தரமாக வசைபாடுவது, அவர்களின் அந்தரங்கங்களை தோண்டி எடுத்து திரித்து வெளியிடுவது, எழுதவரும் பெண்களை அவமதிப்பது என்பது ஓர் இயக்கமாகவே நெடுநாள் நடைபெற்றது. இன்றும் பெண்கள் இணைய வெளிக்கு வர அச்சப்படும் நிலை உருவாகியது. இவையெல்லாம் பெரியார் பெயரால்,தமிழியத்தின் பெயரால் சிலரால் செய்யப்பட்டன. பெரியாரியம் பேசும் கணிசமானவர்கள் இவற்றை ஆதரிக்கவும் செய்திருக்கிறார்கள். அவை தங்களை திருப்பித்தாக்கியபின்னர்தான் அவர்கள் விபரீதத்தை உணர்ந்தார்கள்.

ஆக பெரியாரை முன்வைப்பவர்கள் இப்படியான ‘காரியங்களைத்தான்’ செய்வார்கள் என்று நிறுவமுயல்வதுதான் ஜெயமோகனின் நோக்கம். ஆனால் இதன் மறுபக்கத்தையும் சேர்த்துத்தானே யோசிக்க வேண்டும். டோண்டுராகவன் என்கிற பார்ப்பனர் தொடர்ச்சியாக பார்ப்பன சாதி வெறியோடு எழுதி வந்த எழுத்துக்கள்தான் இவற்றுக்குக் காரணம். அதுதான் போலிடோண்டு எழுத்துக்களைச் சிலர் ஆதரிக்கத்தூண்டியது. அதுமட்டுமில்லாமல் பெரியாரைச் சிறியார் என்றும் மனைவியைக் கூட்டிக்கொடுத்தவர் என்றும் வஜ்ரா போன்ற இந்துத்துவவாதிகள் தொடர்ச்சியாக எழுதிவந்தார்கள். ஹரிஹரன் என்ற நபர் எழுதிய எழுத்துக்கள் மூர்த்தியின் எழுத்துகளுக்குச் சற்றும் குறைவில்லாத கீழ்த்தரமான எழுத்துக்கள். ஆனால் போகிற போக்கில் ஜெயமோகன்

இணையத்தில் தமிழைக் கொண்டுவர உழைத்த முன்னோடிகளில் சிலரே சாதிக்காழ்ப்புடன் இதைச் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.

என்று புழுதி வாரித்தூற்றுகிறார். சாதியக்காழ்ப்பு என்பது யாருக்கு இருந்தது? ஜெயராமன் என்கிற பார்ப்பனர் ஒரு பெண் பதிவரைக் குறித்து மிக ஆபாசமாக எழுதியதும், அதுவும் சல்மா அயூப் என்ற முஸ்லீம் பெண்ணின் பெயரால் எழுதியதும் அவரைக் காப்பாற்ற டோண்டுராகவன் முதலான பார்ப்பனர்கள் கள்ளத்தன காரியங்கள் புரிந்ததையும் சேர்த்துத்தானே ஜெயமோகன் பேசியிருக்க வேண்டும்.

ஆனால் ஜெயமோகனுக்கு நண்பர்களோ அரவிந்தன்நீலகண்டன், நேசகுமார் மாதிரியான இந்துத்துவவாதிகளே. அதனால்தான் நேசகுமாருக்கு ஆதரவாக ”தமிழ்மணம் போன்ற திரட்டிகளே அவதூறாளர்களின் கையில் ஆயுதமாகத்தான் பயன்பட்டன என்று இணையத்தில் வாசித்தபோது மனக்கசப்படைந்தேன்” என்று தமிழ்மணம் திரட்டி மீது பழி சுமத்துகிறார்.

நேசகுமாரைத் தமிழ்மணம் நீக்குவதற்கு முன்பு அரவிந்தன்நீலகண்டன், ஹரிஹரன், வஜ்ரா, ஜடாயு என்று ஏராளமான இந்துத்துவவாதிகள் எழுதிவந்தார்கள். நேசகுமார் ‘தமிழ்மணம் குறிப்பிட்ட பதிவரின் ஐ.பியை மற்றவர்களுக்கு கொடுத்ததாக எழுப்பிய குற்றச்சாட்டை’த் தொடர்ந்தே அவர் நீக்கப்பட்டார்.நேசகுமாரின் குற்றச்சாட்டுக்கோ எந்த ஆதாரமும் கிடையாது. இப்படி பிரச்சினையின் ஒருபக்கத்தை முழுவதுமாக மறைத்து ஒரு அவதூறான கட்டுரை எழுதியுள்ள ஜெயமோகன், மேலும் பெரியார் தொடங்கி கமலாதாஸ் வரை அரைகுறை உண்மைகள் மற்றும் பொய்கள், முட்டாள்தனமான முன்தீர்மானங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவதூறுகளைப் பரப்பி வரும் ஜெயமோகன், எழுத்தாளர் என்றெல்லாம் பந்தா காட்டாமல் தனக்குத் தெரிந்ததை எழுதும் வலைப்பதிவர்கள் குறித்து குற்றம்சாட்டலாமா?

அரவிந்தன்நீலகண்டன்தான் ஜெயமோகனுக்குக் கணிப்பொறியில் தட்டச்சு செய்ய கற்றுக்கொடுத்தாராம். ஒரு மணிநேரத்தில் இரண்டாயிரம் வார்த்தைகள் தட்டச்சும் ஜெயமோகன் ( ரைட்டரா, டைப்ரைட்டரா) எழுதுவதை விட்டுவிட்டால் கூட டைப்பிஸ்ட் ஆகும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிறைய வார்த்தைகளை டைப் செய்ய முடியும் என்பதற்காகவே அபத்தமாக உளறிக்கொட்டுவதை எப்போது நிறுத்தப்போகிறார் ஜெயமோகன்?

Advertisements

4 Comments

 1. ஜெ.வின் அந்த கட்டுரை தொடர்பில் நான் எழுதியது
  http://govikannan.blogspot.com/2009/12/blog-post.html.
  //லெமுரியாக் கண்டம் போன்ற தமிழ்த்தேசியப்பெருமிதங்களை முன்வைப்பவர், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் தமிழகச் சாதியினர், மலையாளிகள் ஆகியோரைத் தமிழர்களின் எதிரியாகச் சித்தரிப்பவர்.//
  குமரிமைந்தன் ஆரியர் வருகை குறித்த கைபர் போலன் கனவாய் சிந்தாந்தங்களை எதிர்பவர் என்பதால் குமரி மைந்தன் காட்டும் தமிழ் தேசியம் பார்பனர்களுக்கு உவர்பாக இருக்காது.

 2. //இணையத்தில் பிறரை கீழ்த்தரமாக வசைபாடுவது, அவர்களின் அந்தரங்கங்களை தோண்டி எடுத்து திரித்து வெளியிடுவது, எழுதவரும் பெண்களை அவமதிப்பது என்பது ஓர் இயக்கமாகவே நெடுநாள் நடைபெற்றது. இன்றும் பெண்கள் இணைய வெளிக்கு வர அச்சப்படும் நிலை உருவாகியது. இவையெல்லாம் பெரியார் பெயரால்,தமிழியத்தின் பெயரால் சிலரால் செய்யப்பட்டன. பெரியாரியம் பேசும் கணிசமானவர்கள் இவற்றை ஆதரிக்கவும் செய்திருக்கிறார்கள். அவை தங்களை திருப்பித்தாக்கியபின்னர்தான் அவர்கள் விபரீதத்தை உணர்ந்தார்கள்.//

  சிரிப்பாய் இருக்கிறது. அந்தக் கட்டுரையில் , ஏகப்பட்ட அபத்தங்கள்… பதிவு எழுதுபவர்கள் எல்லாம் படைபபளிகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும் அபத்தம். வலைப்பதிவுகள் சோசியல் நெட்வொர்கிங் தளங்களாக மாறி நீண்ட காலமாகிவிட்டது. இதை உணராமல், பதிவு எழுதுபவர்களைக் குறை கூறி அவர்கள் எழுதுவதை நிறுத்த வைக்கும் புண்ணிய காரியத்தில் ஈடுபடும் இவரெல்லாம் பிறரின் தடுப்பு வேலைகளை குறை சொல்கிறார். பாவம், பெண்கள் அதிகம் வலையுலகில் இல்லை என்று வருத்தப் படுகிறார் போல.

 3. யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

 4. […] குறித்து ஒரு ஆதாரபூர்வமான மறுப்பு […]


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s